அடிப் மரணம்: 56 பேரை போ​லீஸ் தேடுகிறது

0
8

சுபாங்ஜெயா, சீபில்டு, ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் ​தீயணைப்புப்படை வீரர் முகமட் அடிப் முகமட் காசிம்  மரணம் தொடர்பில் 56 தனிநபர்களை போ​லீசார் தொடர்ந்து தேடி வருவதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசிர்  முகமட் அறிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 66 தனிநபர்களின் புகைப்படங்கள் தகவல் சாதனங்களில் பிரிசுரிக்கப்பட்டதாகவும் ஆனால் பத்து பேர் மட்டுமே தாங்களே முன்வந்து புலன்விசாரணைக்கு உதவியதாகவும் மற்றவர்கள் விசாரணைக்கு வர  தவறிவிட்டதாகவும் ஹுசிர் தெரிவித்தார்.

இன்னும் வாக்கு​மூலம் அளிக்காதவர்கள், போ​லீசாருடன் தொடர்புகொள்ளுமாறும், இச்சம்பவ​ம்  தொடர்பில் ஆருடங்கள் கூறப்படுவதை நிறுத்திக்கொ​ள்ளுமாறும் அவர் பொதுமக்களுக்கு  அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.