அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து பெட்ரோல் உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக இலக்குக்குரிய பி40 தரப்பை சேர்ந்த 29 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படவிருக்கிறது.
அரசாங்கத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து பொருட்களின் விலை உயர்வை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நேரடியாக பெட்ரோலுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை, ரத்து செய்யப்பட்டு, அந்த தொகை நேரடியாக மக்களுக்கு வழங்கப்படவிருப்பதால்பெட்ரோல் ரோன் 95 ரகத்தின் விலையும் 20 விழுக்காடு உயரக்கூடும்.
இதனால் போக்குவரத்து செலவினத்தை காரணம் காட்டி, பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர் பேராசிரியர் டாக்டர் பார்ஜோயாய் பார்டாய் கோடிகாட்டியுள்ளார்.