அதானி குழுமத்தின் சர்ச்சைக்குரிய நிலக்கரி திட்டத்துக்கு ஆஸ்திரேலியாஅனுமதி வழங்கியது

0
14
இந்திய நிறுவனமான அதானியின் சர்ச்சைக்குரிய நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கான தொடக்க பணிகளை மேற்கொள்ள ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதானி குழுமம் நிலக்கரி எடுக்கவிருக்கும் இடம் குவீன்ஸ்லாந்திலுள்ள கலீலி ஆற்றுப் பள்ளத்தாக்கில் இருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதிகளுக்காக அதானி நிறுவனத்தின் இந்த திட்டம் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சுற்றுச்சூழல் தேவைகளை பூர்த்தி செய்த நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்திற்கு மாகாண அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

அப்பகுதியில் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை பாதுகாக்க அளிக்கப்பட்ட தனித்திட்டம் ஒன்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடினமான சோதனைகளுக்கு பிறகே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் லீயான் இனோக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதானி குழுமத்தின் ஆஸ்திரேலிய தலைமை நிர்வாகி லூகஸ் டோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் விதிகளை அதானி நிறுவனம் கடுமையாக பின்பற்றும் என்றும், கட்டுமானப் பணிகள் வரும் வாரங்களில் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

விமர்சகர்கள் என்ன கூறுகிறார்கள்?

இந்த சுரங்கத்திற்கு அனுமதி அளிப்பது, அதே பகுதியில் உள்ள வேறு ஆறு சுரங்கங்களுக்கான அனுமதியும் வழங்க வழிவகை செய்யும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கரிமிகெல் பகுதி ஏற்கனவே ஒரு தரிசு நிலம்தான். ஆனால் இங்கு சுரங்கம் அமைப்பது சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

“உலகின் பெரிய பவளப்பாறை அமைப்பை வைத்திருக்கும் ஆஸ்திரேலியா மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்” என்கிறார் ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஷனி டாகெர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here