அதிமுக ஆட்சியில் வெளிநாட்டு நாடகம் – மு.க.ஸ்டாலின்

0
44

சென்னையில் இன்று (செப்.12) நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “முதல்வர் மட்டும் வெளிநாடு சென்று வரவில்லை. அவருடன் 10-15 பேர் சென்றனர். இன்னும் 7-8 பேர் வெளிநாடு செல்லவிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. மறுபடியும் முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போகட்டும், வேண்டாம் என்று சொல்லவில்லை.

வெளிநாட்டுக்குச் சென்றதால் முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் வந்தால் நானே பாராட்டு விழா நடத்துவதாகச் சொல்லியிருந்தேன். அதனை மறுக்கவில்லை. ஆனால், ஸ்டாலின் எங்களுக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டாம் என்று முதல்வர் கூறியிருக்கிறார். ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’. அதனை அவரே ஒப்புக்கொண்டார் திமுக ஆட்சிக்காலத்தில், துணை முதல்வராக இருந்த நான் வெளிநாடு சென்றிருக்கிறேன். முதலீட்டைப் பெறுவதற்காக அல்ல. சில அதிகாரிகளை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன். மெட்ரோ ரயில் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்றோம் என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.