அதிமுக – பாஜக – பாமக உடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா பதில்!

0
20
வரும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடருமா என பதில் அளித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது தேமுதிக. இதில் ஒரு இடத்தில் கூட தேமுதிக வெற்றி பெறவில்லை. தேமுதிகவின் வாக்குவங்கியும் கடுமையாக சரிந்தது.
இப்படி இருக்கையில், காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் வரும் தேர்தல்களிலும் தேமுதிக கூட்டணி தொடருமா? என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு, தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது வேதனையாக உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்தால் தண்ணீர் பிரச்சனை வராது. பிரதமர் மற்றும் தமிழக முதல்வரிடம் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசுவோம்.
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கூட்டணி தொடருமா என கேட்கிறீர்கள், ஏற்கனவே அறிவித்தப்படி உள்ளாட்சி தேர்தலிலும் வரும் தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எந்ததெந்த இடங்களில் தேமுதிக போட்டியிடும் என்பது குறித்து தெரிவிக்கப்படும்.
அதன் பின்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து உங்களது கருத்து என்ன என கேட்கப்பட்ட போது அதிமுகவின் உட்கட்சி பூசல் குறித்து நாம் கருத்து தெரிவிக்க கூடாது என கூறி நகர்ந்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here