அத்வானி 7-ந்தேதி புதுவை வருகை: 5 நாட்கள் தங்குகிறார்

0
210

ஒடிசாவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் குடும்பத்தினர் புதுவை செயின்ட் பஜார் லாரன்ஸ் தெருவில் வசிக்கிறார்கள். இவர்கள் புதுவையில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த குடும்பத்தினர் அத்வானியின் மனைவிக்கு நெருங்கிய உறவினர்கள் ஆவர். அவர்களின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அத்வானி புதுவை வருகிறார். அவரது பாதுகாப்பு கருதி ஆரோவில்லில் உள்ள விடுதியில் தங்குகிறார்.

அத்வானி வருகையையொட்டி அவருக்கு பாதுகாப்பு அளிப்பது சம்பந்தமாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் ஆரோவில்லில் அவர் தங்குவதால் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அத்வானி மத்திய பாதுகாப்பு படையின் இசெட் பிளஸ் பிரிவு பாது காப்பில் உள்ளார். எனவே, மத்திய புலனாய்வு படையினரும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்துள்ளார்கள்.

அவர் உறவினர் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதால் அரசியல் நிகழ்ச்சி எதிலும் பங்கேற்பாரா? என்று தெரியவில்லை. புதுவை பாரதிய ஜனதா கட்சியினரும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here