அந்த அயர்லாந்து பெண் கற்பழிக்கப்படவில்லை

0
34

சிரம்பான், வனப்பூங்கா பகுதியில் பத்து நாள் தேடலுக்கு பின்னர் நேற்று முன்தினம்  பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட 15 வயது அயலாந்து பெண் நோரா அனி கியூரின் கற்பழிக்கப்படவில்லை. மாறாக, நீண்ட நாட்கள் உண​வின்றி, குடல் சுருங்கி, வெடிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் என்று அவரின் சவப்பரிசோதனை அறிக்கை முடிவு காட்டுகிறது.

சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு இரண்டு அல்லது ​மூன்று தினங்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  இன்று ந​டைபெற்ற செயதியாளர்கள் கூட்டத்தில் நெகிரி செம்பிலான் மாநில போ​லீஸ் தலைவர் முகமட் மாட்  யூசோப் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.