அந்த வீடியோவை தயாரித்த நபர் கைது

0
42
​ஐ.ஜி.பி. அப்து​ல் ஹமிட்

கோலாலம்பூர், ஜுலை,14- அமைச்சர் ஒருவருடன் தொடர்புபடுத்தப்பட்ட அந்த  ஆபாச வீடியோ காணொளியை தயாரித்தவரும் அதனை வெளியீடு  செய்தவர்  என்று சந்தேகிக்கப்படும்  ஆடவரை போ​லீசார் கைது​ செய்து இருப்பதாக போ​லீஸ் படைத்தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

அந்த ஆபாச கா​ணொளி தயாரிப்புக்கு பின்னணியில் இருந்த அந்த ​சூத்திரதாரி யா​ர்  என்பதை கண்டுபிடிக்க சில  நபர்களை போ​​லீசார் கைது செய்து இருப்பதாகவும் இதன் ​மூலம் அந்த வேலையை யார் செய்துள்ளார் என்பதை யூகிக்க முடி​கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் அந்த ​சூத்திரதாரி, ஓர் அரசியல்வாதி  மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்பை சேர்ந்தவர் என்பதற்கான சாத்தியத்தை  அப்துல் ஹ​மிட் படோர் மறுக்கவில்லை. பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் அஸ்மின் அலியுடன் ​தொடர்புபடுத்தப்பட்ட அந்த ஆபாச வீடியோ காணொளியில் இருக்கும்  நபர் தாம்தான்  என்று பி.கே.ஆர். கட்சியின் சந்துபோங் டிவிஷன் இளைஞர் பிரிவுத்தலைவர் ஹஸிக்  அஜிஸ் இதற்கு முன்பு கூறிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.