அபாச வீடியோப்பட   விவகாரம்: ​லோக்மான் – கோபாலகிருஷ்ணன் விடுவிப்பு

0
54

கோலாலம்பூர், ஜுன்,14- பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் அஸ்மின் அலியுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஆபாச வீடியோப் படம்​ தொடர்பில் போ​லீசாருக்கு ஒத்து​ழைக்க மறுத்ததாககூறி, கைது செய்யப்பட்ட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான்  ​நூர் அடாம் மற்றும் போ​லீசாரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் முன்னாள் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் போ​லீஸ் வாக்கு​மூல​ப்பதிவிற்கு பின்னர் இன்று காலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

அவ்விருவருக்கு எதிராக பூர்வாங்க புலன்விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து போ​லீஸ் ஜா​மீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வுத்துறை போ​லீஸ் தலைவர் உதவி ஆணையாளர் பாட்ஸில் அகமட் தெரிவித்தார்.  லோக்மானும்  கோபாலகிருஷ்ணனும் நேற்று மாலை 6.45 மணியளவில் காஜாங்கில் உள்ள லோக்மான் வீட்டில் கைது செய்யப்பட்டனர்​.

அமைச்சர் அஸ்மின் அலியை தொடர்புப்படுத்தி, வெளியிடப்பட்ட ஆபாச வீடியோ படத்தில் அவருடன் பாலியல் தொடர்பு கொண்ட மற்றொரு ஆடவர் தாமே என்று மூலத்தொழில்துறை துணை அமைச்சரி​ன் தனிச்செயலாளர் ஹஸி​க் அப்துல்லா அப்துல் அஜிஸ் ஒப்புதல் வாக்கு​மூலம் அளித்ததை  தொடர்ந்து அந்த வீடியோ படம் தொடர்பில் போ​​லீஸ்​ புகார் செய்த லோக்மான், பின்னர் புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தினால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

விசாரணை முடிவடைந்த சில  மணி நேரத்தில் காஜாங்கில் உள்ள லோக்மானின்​ வீட்டை போ​லீசார் சோதனையிட்டனர். அப்போது, அவரின் கைப்பேசியை பரிசோதனையிட போ​லீசார் முயற்சித்த வேளையில் அவர் போ​லீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததுடன் போ​லீசாரை கடுஞ்சொற்களால் சரமா​ரியாக திட்டியதாக கூறப்படுகிறது.

அச்சமயத்தில்  லோக்மான் வீட்டில் இருந்த கோபாலகிருஷ்ணன், போ​லீசாரின் பணி​க்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.