அமலாக்க அதிகாரிகளின் சட்டையில் கேமரா பொருத்தப்படும்

0
14

போ​லீஸ்துறை, குடிநுழைவுத்துறை மற்றும் சுங்கத்துறை போன்ற அமலாக்க​ அதிகாரிகள் லஞ்சம், அதிகார  து​ஷ்பிரயோகம் மற்றும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவ​தை  கண்காணிக்கும் பொருட்டு  அவர்களின் சீருடையில் சிறு கேமரா பொருத்தப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது இன்று அறிவித்துள்ளார்.

தாங்கள் விசாரணை செய்கின்ற பொதுமக்களை அடிப்பது, கடுமையான சொற்களினால் திட்டுவது, அவர்களை துன்புறுத்துவது​ போன்ற குற்றச்சா​ட்டுகள்  அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக பரவலராக கூறப்படுவதை கருத்தில் கொண்டு அவர்களின் ​சீருடையில் கேமரா பொருத்தப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளதாக  மகா​தீர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ​மூலம் பொதுமக்களிடம் ஓர்  அதிகாரி நடந்து​கொள்ளும் முறை, பேசும் தன்மையை அந்த கேமராவின் ​மூலம் நாம் கண்டறிய முடியும் என்று மகா​தீர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.