அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் பழுதானதால் விபரீதம்: 51 மாடி கட்டிடத்தில் மோதியதில் விமானி பலி!

0
30
நியூயார்க்கில் உள்ள மான்ஹாட்டன் நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை மேகோர்மேக் என்பவர் இயக்கினார். ஹெலிகாப்டர் பறக்க தொடங்கிய 11 நிமிடத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அதனை கீழிறக்க விமானி முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர்அருகில் இருந்த 51 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேகோர்மேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here