அமெரிக்கா சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்புகிறார்

0
24

ஓ.பன்னீர்செல்வம், அரசு முறை பயணமாக கடந்த 7-ந் தேதி அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்குள்ள சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியூயார்க்கில், உலக தமிழ் இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அமெரிக்க நாட்டின் தமிழ் இளைஞர் உலகக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர், தமிழ் இளைஞர் உலகக் கூட்டமைப்பின் நியூயார்க் சேப்டர் தலைவர் கே.ஓ.தாமஸ், தமிழக அரசின் நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் 10 நாள் அமெரிக்க பயணம் நேற்று நிறைவடைந்தது. அங்கிருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் இன்று(திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.