அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலாவுக்கு 160 கோடி மக்கள் நிதி

0
15
வாஷிங்டன், ஜூலை 9- அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக கமலா ஹாரீஸ் கடந்த 6 மாதத்தில் ரூ.160 கோடி நிதி திரட்டி உள்ளார்.   அமெரிக்காவில் அதிக அளவில் தேர்தல் நிதி எந்த வேட்பாளருக்குக் கிடைக்கின்றதோ, அவர்கள்தான் அதிபர் பதவி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடியும். இதில், கமலா ஹாரீசுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது.  20 போட்டியாளர்கள் மத்தியில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரீசின் பேச்சு மக்களின் கவனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து  3 மாதத்தில் அவருடைய பிரசாரத்திற்காக ரூ.84 கோடி நிதி கிடைத்திருக்கிறது. அவருக்கு நிதி கொடுத்துள்ள 2 லட்சத்து 79 ஆயிரம் பேரில் 1.5 லட்சம் பேர் புதிய நன்கொடையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் தேர்தல் களத்தில் குதித்த கமலா ஹாரீஸ் கடந்த 6 மாதத்தில் ரூ.160 கோடி வரை நிதி திரட்டி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here