அமைதிக்கான நோபல்: காங்கோ டாக்டர், ஈராக் பெண் தேர்வு

0
134

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டின், அமைதிக்கான நோபல் பரிசு, ஆப்ரிக்க நாடான, காங்கோவைச் சேர்ந்த டாக்டர் டெனிஸ் முக்விகே, 63, ஈராக்கைச் சேர்ந்த பெண்ணான, மனித உரிமை ஆர்வலர், நாதியா முராட், 25, ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.இந்தாண்டின், மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுக்கு உரியோர் பெயர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பை, ஐரோப்பிய நாடான, சுவீடனைச் சேர்ந்த, நோபல் பரிசுக் குழு நேற்று வெளியிட்டது.போராட்டம்அந்த அறிவிப்பில், காங்கோ நாட்டைச் சேர்ந்த டாக்டர் டெனிஸ் முக்விகே, மத்திய கிழக்கு நாடான, ஈராக்கின் குர்து இனத்தைச் சேர்ந்த, மனித உரிமை ஆர்வலர், நாடியா முராட் ஆகியோருக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும், உள்நாட்டு கலவரங்கள் நிகழும் பகுதிகளில், பாலியல் வன்முறைகளை ஆயுதமாக பயன்படுத்துவதை எதிர்த்து போராடி வருகின்றனர்.நோபல் பரிசுக் குழு தலைவி, பெரிட் ரீஸ்ஆண்டர்சன் கூறியதாவது:பெண்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். போரில், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; அப்போது தான், அமைதியான உலகை உருவாக்க முடியும்.இதற்காக பாடுபட்டு வரும், காங்கோ நாட்டைச் சேர்ந்த டாக்டர் டெனிஸ் முக்விகே, ஈராக்கின் மனித உரிமை ஆர்வலர், நாடியா முராட் ஆகியோருக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.