அம்னோவைக் கேடயமாக பயன்படுத்த வேண்டாம்

0
9

கோலாலம்பூர், ஜுலை,14- அம்னோ தலைவர்கள் நீதிமன்ற வழக்குகளிலிருந்து தப்பிக்க கட்சியை ஒரு “கேடயமாக” பயன்படுத்தக் கூடாது என்று   அம்னோ முன்னாள் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் வலியுறுத்தினார். இன்று பாடாங் ரெங்காஸ் அம்னோ தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கைரி, அடிநிலை கட்சி உறுப்பினர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள் என்றார்.

தான் குறிப்பிடுவது நஜீப்பைத்தான் என்று அவர் தெளிவாகவே எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினாலும் நஜீப் அண்மையில் தேசிய முன்னணியின் ஆலோசக வாரியத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

நான் நஜீப்பை மரியாதைக் குறைவாக பேசுவதாக நினைக்க வேண்டாம்…….அவர் என்னை அமைச்சராக்கியவர்…..அதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லவருவது என்னவென்றால் யாரும் கட்சியைத் தங்களைப் பாதுகாக்கும் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. கட்சியின் அடிநிலையில் உள்ள மில்லியன் கணக்கான உறுப்பினர்கள் அப்பாவிகள் என்று கைரி குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here