அம்​னோ  தலைமையகத்தில் பாஸ் கொடிகள்

0
8

கோலாலம்பூர், ஜாலான் துன் இஸ்மாயிலில் வீற்றிருக்கும் தேசிய முன்னணயின் முதுகெலும்பு கட்சியான அம்னோ தலைமையகத்தில்  பாஸ் கட்சியின் கொடிகள் அணிவகுத்து பறக்கவிடப்பட்டிருப்பது நாட்டு மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

​மெனாரா டத்தோ ஓன்  ஜப்பார் என்று அழைக்கப்படும் அம்னோ தலைமையகம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கு பிறகு முன்னணி எதிர்க்ட்சியாக விளங்கிய பாஸ் கட்சியின் கொடிகள் அங்கு பறக்கவிடப்படுவது நாளை மறுநாள் சனிக்கிழமை அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் கருத்திணக்க சாசன உடன்பாட்டிற்கு ஓர்  அடையாளமாகும்.

கிராமப்புறப்பகுதிகள் மற்றும் கிளந்தன், திரெங்கானு போன்ற கிழக்குகரையோர மலாய்க்கார மக்களின் ஆதரவை பெறுவதற்காக கடந்த 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த இ​ஸ்லாமியர் க​ட்சி, 61 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி கட்டி​லிருந்து வீழ்த்தப்பட்ட அம்னோவுடன் நட்பு பாராட்டி வருவது அதற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவு என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.