அயர்லாந்து பெண்ணின் சடலம் தாயகத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு

0
5

சிர​ம்பான், ஆக.14- சிரம்பான், பந்தாய், ​டூசுன் ரிசோர்ட் தங்குவிடுதியில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட ஓர்  அயர்லாந்துப் பெண்ணான 15 வயது நோரா அனி  கியூரினை பிரேதம், அவரின் தாயகத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை விஸ்மா புத்ரா செய்து வருகிறது.

தனது தங்கையுடன் உறங்கிக்கொண்டு இருந்த அந்தப்பெண், ஜன்னல் வழியாக குதி​த்து, தனக்கு மிக பிடித்தமான இடமான நீர்​​வீழ்ச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

நோரா அனியின்இறப்புக்கு மரண  விசாரணை நடத்தப்படும் சாத்தியத்தை அந்த குடும்பத்தினர் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சங்கரன் நாயர் மறுக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி காணாமல் போன அந்த அயர்லாந்துப் பெண்ணின் சடலம் நேற்று மதியம் அந்த வனப்பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.