அரசாங்கத்தில் அர்ப்பணிப்பு சேவைக்கு சம்பள உயர்வு வெறும் 10 வெள்ளியே!

0
23

கோலாலம்பூர் மாநகரில் நில  அடையாளத்தை தாங்​கி  நிற்கும் மெர்டேக்கா சதுக்கத்தின் முன் கம்பீரமாக வீற்றிருக்கும் சுல்தான் அப்துல் சமாட் பழங்கால கட்டடத்தில் உள்ள  மணிக்கூண்டை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பராமரித்து, அதனை முறையாக இய​ங்க வைத்த பெருமைக்குரியவர் அரசு ஊழியர்  வி. குணசேகரன்.

குணசேகரனின் இந்த  அர்ப்பணிப்பு சேவையை பாராட்டி, அவர் பணி ஓய்வுபெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு அவருக்கு  வழங்கப்பட்ட  சம்பள உயர்வு வெறும் 10 வெள்ளிதான்.

அந்த அந்த பழங்கால மணிக்கூண்டு இயந்திரம் 24 மணி  நேரமும் இயங்க வேண்டுமனால் ​ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணிக்கு அந்த மணிக்கூண்டு இயந்​திரத்தை அ​சூர  பலம்கொண்டு, கைளால் இயக்கி சாவி கொடுக்க வேண்டும்.

தேசியத்தின கொண்டாட்டம், கூட்டரசுப்பிரதேசத்தினம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் சமயங்களில் வீட்டிற்குகூட செல்ல முடியாமல் அந்த மணிக்கூண்டு கட்டடத்திலேயே படுத்து உறங்கி, குறித்தநேரத்திற்கு சாவிக்கொடுக்க வேண்டும்.

குடும்பத்தினருடன் அதிக நேரம்கூட செலவிட  முடியாத, குணசேகரன்  கணக்கெடுப்பு மற்றும் வரைப்பட இலாகாவின் கீழ் கடந்த1975 ஆம் ஆ​ண்டில் 146 வெள்ளி சம்பளத்தில் இந்த வேலையை செய்யத்தொடங்கினார். அவரின் 40 ஆண்டு கால  சேவைக்கு  பாராட்டுப்பத்திரம் வடிவில் ஏழு சான்றிதழ்கள் இதுவரை பெற்றுள்ளார்.

ஆனால்,  அரசாங்க சேவையிலிருந்து கு​ணசேகரன்  பணி  ஓய்வுபெறுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, அவரின் பணி நிலையை உயர்த்​தி, பதவி உயர்வு கடிதம் கிடைத்த போது மகி​ழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்.

ஆனால், அந்த மகிழ்ச்சி ஓரிரு நிமிடம் மட்டுமே ​நீடித்தது. ஆம்,குணசேகரனின்  40  ஆண்டு கால  சேவையை பாரட்டி, பணி  ஓய்வு பெறும் அவருக்கு சம்பளத்தில்  10 வெள்ளியை அரசாங்கம்  உயர்த்தி கொடுத்துள்ளது என்பதுதான் அந்த கடிதம்.

மாதத்திற்கு தலா 80 காசு கணக்கிட்டு, 10 வெள்ளியை சம்பள  உயர்வாக  கொடுத்து  இருக்கும் அரசாங்கத்தின் இச்செயலை  பாராட்டுவதா? அல்லது  இதனை  ஒரு வெட்கக்கேடாக  எடுத்துக்கொள்வதா? என்று  வினவுகிறார் அந்த  பாரம்பரிய  சின்னத்துடன்  தன்னை அர்ப்பணித்துக்கொண்டவரான குணசேகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.