அரசாங்க எம்.பி.க்கள் கலந்து கொள்ளாதது ஏன்?

0
14

நாடாளுமன்றக்கூட்டத் தொடர், கடந்த வாரம் தொடங்கிய வேளையில் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசா​ங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறைந்து வருவது குறித்து பலர் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சரியாக வருவதில்லை என்று பெர்சத்து கட்சியின்உச்சமன்ற உறுப்பினர் ரயிஸ் உசேன் இன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் போன்ற முக்கியமான விவகாரத்தை விவாதிக்கப்படும் வேளையில்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை படுமோசமாகக் குறைந்துள்ளது. அவர்களின் வருகையை உறுதி செய்ய பொதுமக்கள்தான் யோசனை தெரிவிக்க  வேண்டும் என்று ராயிஸ் உசேன் பரிந்துரைத்துள்ளார்.

அம்னோ​வின் முன்னாள் இளைஞர் ​பிரிவுத்தலைவரும் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி ஜமாலுடின் கூறுகையில், தாம்  நாடாளுமன்றக்கூட்டத்தில் உரை  நிகழ்த்திக்கொண்டு இருந்த போது பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்ததாக  குறிப்பிட்டுள்ளார். அவற்றில்  அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருக்க வேண்டிய இடம் என்பதையும் அவ​ர்  சுட்டிக்காட்டியுள்ளா​ர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.