அரச மலேசிய போலீஸ் படையினரின் விடுமுறைகள் முடக்கம்!

0
315

வரும் புதன்கிழமை தொடங்கி மார்ச், ஏப்ரல், மே வரை அரச மலேசிய போலீஸ் படையினரின் வெளினாட்டு பயண  விடுமுறைகள் யாவும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் நிர்வாக இலாகாவின் இயக்குனர் ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் காபார் ராஜாப் தெரிவித்தார். வரும் பொதுத்தேர்தலை ஒட்டி விடுமுறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இது உயர்மட்ட தலைவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும்  அவர் கூறினார். உள்நாட்டு பயண விடுமுறைகள் உட்பட அனைத்து விடுமுறைகளும், பொதுத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முடக்கப்படும் என அப்துல் காபார் மேலும் கூறினார். இருப்பினும், புக்கிட் அமான் இயக்குனர்களின் வேலை தொடர்பான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.