அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -மு.க.ஸ்டாலின்

0
49

கரூர்

அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தடா கோவில், வாவிகிணம், சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின்  பேசியதாவது;-

திமுக தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக, எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார், ஆனால் 23ம் தேதிக்கு பின்னர் அதிமுக ஆட்சி தானாக கவிழும்.

அரவக்குறிச்சியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க முயற்சி எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார். அரவக்குறிச்சி ஈசநத்தம் பகுதிகளில் விளையும் முருங்கை உள்ளிட்ட விளைபொருட்களுக்கு குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

அரவக்குறிச்சி தொகுதியில் வீட்டுமனை இல்லாத 25 ஆயிரம் பேருக்கு இலவசமாக தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும்.  திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ள திட்டம் தொலைநோக்கு பார்வையுடையது என்று கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here