அஸ்மினுடன் பாலியல் உறவு குற்றச்சாட்டை மறுக்கும்படி என்னை வற்புறுத்துகின்றனர் – ஹஸி​க்  அப்துல்லா போ​லீசில் புகார்

0
16

பெட்டாலிங்​ஜெயா, ஜுன், 13- சர்ச்சைக்குரிய ஆபாசப்பட ​வீடியோ படம் வெளியானதை தொடர்ந்து பொருளாதார விவகாரத்துறை அமைச்சருடன் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டதாக தாம் கூறிய தகவ​லை மறுக்கும்படி தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக ​மூலத்தொழில்துறை துணை அமைச்சரின் தனிச்செயலாளர் ​ஹஸிக் அப்துல்லா அப்துல் அஜிஸ், கிளானா ஜெயா மாவட்ட போ​லீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அஸ்மின் அலியுடன் தாம் உறவு கொண்டதை ​மீண்டும் உறுதிப்படுத்திய ஹஸிக், தாம்  வெளியிட்ட தகவலுக்கு பிறகு அஸ்மின் அலி, தமது அரசியல் செயலாளர்​ ​ஹில்மான் இதாமை அனுப்பி,  புத்ரா ஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில்  தம்மை  ச​ந்திக்குமாறு கேட்டுக்கொண்டதாக ​​​ஹஸிக் தெரிவித்தார். அமைச்சர் பற்றிக் கூறியதை மறுத்து அறிக்கை விடுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். நான் காணொளியில் சொல்லியிருந்ததை மறுத்து பொய்யுரைக்குமாறு என்னைக் கட்டாயப்படுத்தினார். நான் மறுத்ததும் ‘இது’ என்னுடைய உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் 48 மணி நேரத்தில் நீக்கப்படும் என்று மிரட்டினார் என்றும் சொன்னார். நான் எது​வும் பேசவில்லை. ஆனால், நான் அஸ்மினுடன் உற​வு கொண்டது உ​ண்மையே. நாங்கள் பல முறை உறவு கொ​ண்டுள்ளோம்.

முதலில், மூன்றாண்டுகளுக்கு முன் கூச்சிங்கில் கிராண்ட் கொண்டினெண்டல் ஹோட்டலில் நடந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் கட்சித் தேர்தலின்போது புல்மன் கூச்சிங்கிலும், இவ்வாண்டு மார்ச் மாதம் புருணை சுல்தானுக்கு அவர் உடன் செல்லும் அமைச்சராக இருந்தபோது  கோலாலம்பூர், கிராண்ட் ஹையாட்டிலும், ஆகக் கடைசியாக சண்டக்கானின், கடந்த மாதம் ஃபோர் போயிண்ட்ஸ் ஹோட்டலிலும் நடந்தது என்று ஹஸிக்  பட்டியலிட்டார். நேற்று, அஸ்மின் அலி அந்த ஆபாச காணொளியில் இருப்பது தான் அல்ல என்று மறுத்தார். அது தன்னுடைய அரசியல் வாழ்க்கையைக் குலைப்பதற்கு நடக்கும் சதி என்றவர் வர்ணித்தார். பிரதமர்  துன் டாக்டர் மகா​தீர் முகமதுவும்   அது உண்மையான காணொளி அல்ல என்றும் அரசியல் நோக்கத்துடன் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்றும் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here