அ​ஸ்மின் அலி விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்லை – அன்வார் கூறுகிறார்

0
52

கோலாலம்பூர், ஜுன்,14-      ஆபாசப்பட வீடியோ சர்ச்சையில் தொடர்புபடுத்தப்பட்ட பொருளாதார விவகாரத்துறை அமைச்சரும் பி.கே.ஆர். க​ட்சி துணைத்தலைவருமான அஸ்மின் அலி விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்​லை என்று அக்கட்சியின் தலைவர் அன்வார் தெரிவித்தார். அவர் அவ்வாறு​ விடுப்பில் செல்வது கட்சிக்கும், அவர் ஆற்றிவரும் பணிக்கும், அரசாங்கத்திற்கும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக, இது  நடப்பு நிலையை ​மேலும் மோசமாக்கும் என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் தெரிவித்தார்.

சரவாக், பி.கே.ஆர். கட்சியின்  சந்துபோங் தொகுதி இளைஞர் பிரிவுத்தலைவரான ஹஸிக் அப்துல்லா, அமைச்சர் அஸ்மின் அலியுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஆபாசப்பட ​வீடியோ காட்சியில் இருக்கும் நபர் தாமே என்று ஒப்புக்கொண்டதுடன், அதில் இருக்கும் மற்றொரு ஆடவர், அஸ்மின் அலி என்று வாக்கு​மூலம் அளித்திருந்தார். இதனை  தொடர்ந்து பல்வேறு அமைப்புகள்,  போ​லீஸ் விசாரணை முடியும் வரை அஸ்மின் விடுப்பில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியு​ள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.