அ.தி.மு.க. தொடங்கப்படாமல் இருந்திருந்தால் அண்ணாவின் வரலாறே தெரிந்திருக்காது! – செல்லூர் ராஜூ பேச்சு

0
122

அ.தி.மு.க. என்ற கட்சி தொடங்கப்படாமல் இருந்திருந்தால் அண்ணா என்ற ஒருவர் பிறந்தார் என்ற வரலாறே தெரியாமல் போயிருக்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் இந்த விழாக்களை நடத்தி வருகின்றனர். மதுரையில் நடந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், ’‘எம்.ஜி.ஆர்., தான் தொடங்கிய கட்சியின் கொடியில் தனது தலைவரான பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்தைப் பொறித்தார். தான் ஏற்றுக்கொண்ட தலைவனின் உருவத்துடன் கூடிய கொடியைக் கொண்ட ஒரே இயக்கம் அ.தி.மு.கதான். வேறெந்த கட்சிக்கும் அந்த சிறப்பு இல்லை. எம்.ஜி.ஆர். மட்டும் அ.தி.மு.க.வைத் தொடங்காமல் இருந்திருந்தால், அண்ணா என்ற ஒருவர் பிறந்தார் என்ற வரலாறே தெரியாமல் போயிருக்கும்’’ என்று பேசினார். தான் கூறும் கருத்துகளால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்த முறை அண்ணா குறித்து பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here