அ.தி.மு.க.-பா.ஜ.க.-பா.ம.க. தேர்தல் அறிக்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவம்- மு.க.ஸ்டாலின்

0
59
திருச்சி
திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையையும், திராவிட இயக்கத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. அ.தி.மு.க.-பா.ஜ.க.-பா.ம.க. தேர்தல் அறிக்கைகள் முரண்பாடுகளின் மொத்த உருவம்.
காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று முதலமைச்சர் பேசுவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கையே கிழியப் போகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. 37 எம்.பி.க்களை பெற்றதால் தமிழகத்திற்கு என்ன பயன்.வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வினர் எதிர்ப்பை சந்திக்கிறார்கள்.  காலணி வீசும் அளவுக்கு மக்களின் கோபம் இருக்கிறது.
நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லக்கூடியவர்கள் அல்ல, நாங்கள் எப்போதும் மக்களோடு, மக்களாக இருப்பவர்கள். திருச்சியில் தி.மு.க.வை பொறுத்தவரை போட்டிக்கு நாள் குறித்தாலே, அது வெற்றிக்கு நாள் குறித்தது போலத்தான் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here