ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

0
145
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.  அந்த வகையில், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் எர்ணாகுளம் சென்றார். இன்று காலை 10 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியதால், கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுத மையத்திற்கு சென்றார். மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது திருத்துறைப்பூண்டி விளக்குடியைச்சேர்ந்த  கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதினார்.
மகனை தேர்வு எழுத அழைத்துச்சென்ற இடத்தில் தந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின், மாணவர் கஸ்துரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.