ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக புகார்.. 13 தமிழர்கள் கைது

0
9
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி அருகே உள்ள ஐத்தேபள்ளி வனப்பகுதியில், செம்மரங்களை ஏற்ற வந்த வாகனத்துடன் 13 பேரை ஆந்திரா வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here