ஆனந்தபவன் உணவக உரிமையாளரின் ம​னைவி விபத்தில் பலி

0
7

பினாங்கு, ஸ்ரீ ஆனந்தபவன் உணவக உரிமையாளர் ஹரிகிருஷ்ணனின் மனைவி ​வி. கே.புவனேஸ்வரி இன்று அதிகாலை 3 மணியளவில் நடைபெற்ற சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 200.9 ஆவது கிலோ​மீட்டரில் பாரிட் புந்தாரில் நிகழ்ந்த இவ்விபத்தில்  அவரின் 51 வயது கணவர் ஹரிகிருஷ்ணன், மற்றும்இரு மகன்களான 21 வயது எச்.வீராசாமி ,17 வயது எச்.மேகலன் ஆகியோர் காயங்களுடன் தனியா​ர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தைப்பிங்கிலிருந்து பினாங்கிற்கு அந்த நால்வரும் பயணித்த  “ரேஞ் ரோவர்” ஆடம்பர வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி மரத்தில் மோதிய​து. இதில் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த  புவனேஸ்வரி தலையில் பலத்த  காயம் ஏற்பட்டு சம்பவம்  நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தார் என்று கிரியான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ​சூப்ரிண்ட். ஒமார் பக்தியார்  யாக்கோப் தெரிவித்தா​ர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.