ஆபாசப்பட வீடியோவை யா​ர் வெளியிட்டது? எஸ்.கே.எம்.எம். தேடுதல் வேட்டையை தொடக்கியது

0
17

கோலாலம்பூர், ஜுன்,14-      பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் அஸ்மின் அலியுடன் தொடர்புபடுத்தப்பட்ட, சர்ச்சைக்குரிய ஆபாசப்பட  வீடியோவை வெளியிட்ட தரப்பினரை தேடும் முயற்சியில் மலேசிய  தொடர்புத்துறை, பல்லூடக ஆணையம் (எஸ்.கே.எம்.எம்.) முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆபாசப்பட வீடியோ  தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசில்  புகார் செய்யப்பட்டுள்ளது. மின்னியல்  தொடர்புத்துறை, பல்லூடக குற்றங்களை கண்டறியும் அரசாங்க ஏஜென்சி என்ற முறையில் தமது தலைமையிலான ஆணையம், புக்கிட் அமான், குற்றப்புலனாய்வுத்துறையுடன் இணைந்து இவ்விவகாரத்தை விசாரணை செய்து வருகிறது என்று அந்த ஆணையத்தின் தலைவர் அல் – இஷால் இஷாக்  தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் தேசிய நலன் சம்பந்தப்பட்டுள்ளதால் இதனை விரைந்து விசாரணை செய்து, அந்த ஆபாசப்பட வீடியோ விநியோகத்திற்கு பொறுப்பான நபர்களை  கண்டுபிடிப்பதில் ஆணையம் முன்னுரிமை வழங்கும்  என்று அல் – இஷால் இஷாக் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here