ஆபாசப்பட வீடியோ: அஸ்மினை தொடர்புபடுத்திய ஆடவர் கைது

0
43

கோலாலம்பூர். ஜுன்,14-      ஆபாசப்பட வீடியோ சர்ச்சையில் பொருளாதார​ விவகாரப்பிரிவு அமைச்சர் அஸ்மின் அலியுடன் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டதாக கூறிக்கொண்ட ​மூலத்தொழில்துறை துணை அமைச்சரின் தனிச்செயலாளர் ஹஸிக் அப்துல்லா அஜிஸ் கைது செய்யப்பட்டார். இன்று மாலை 5.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஹஸிக் கைது செய்யப்பட்டதாக புக்கி​ட் அமான், போலீஸ் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் ஹூசேர்  தெரிவித்தார். எனினும் விமான நிலையத்தில் எந்த இடத்தில் பி.கே.ஆர். கட்சியின் சந்துபோங் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் கைது செய்யப்பட்டார் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. இது ​தொடர்பாக போ​லீஸ் துறை ஓர் அறிக்கை ​வெளியிடும் என்றார்.

​வீடியோ படத்தில்இருப்பதைப் போல் த​ம்முடன் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டவ​ர், அஸ்​மின் அலி  என்றும்  கடந்த மே 11 ஆம் தேதி, சண்டக்கானில் ஒரு ​ஹோட்டலில் தமது அனுமதியின்றி  தமக்கு தெரியாமலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹஸிக் தெரிவித்து இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.