ஆபாசப்பட வீடியோ விவகாரத்தில் என்னைத் தொடர்புபடுத்த வேண்டாம்  – ரபிஸி

0
15

கோலாலம்பூர், ஜுன், 14- ஆபாசப்பட  ​வீடியோவிவகாரத்தில் தம்மை சம்ப​ந்தப்படுத்த வேண்டாம் என்று பி.கே.ஆர். கட்சியின் உதவித்தலைவர் ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டார்.இவ்விவகாரத்தில் தனிப்பட்ட நிலையிலும் கட்சி அளவிலும் தாம் சம்பந்தப்பட விரும்ப​வில்லை என்றும் இந்த விவகாரத்தை போ​லீசாரின் விசாரணைக்கு விட்டுவிடுவதுதான் நல்லது என்றும் ரபிஸி குறிப்பிட்டார்.

கடந்தாண்டு பி.கே.ஆர். தேர்த​லில் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு  அஸ்மின் அலியிடம் தோல்விக்கண்டவரான ரபிஸி ரம்லி, அந்த தேர்தலில்,தற்போது ஆபாசப்பட ​வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள சரவா,  பி.கே.ஆர். சந்துபோங் தொகுதி இளைஞர் பிரிவுத்தலைவரான ஹஸிக் அப்துல்லா அப்துல் அஜிஸ், போட்டியிடுவதற்கு தகுதி கொண்டுள்ளார் என்று  அவருக்கு ஆதராவாக பேசினார்  என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த  தேர்தலின் போது, ஹசிக் அப்துல்லா அப்துல் அஜிஸ், ரபிஸி  தரப்பில் இருந்ததாகக் கூறியுள்ள, சபா பிகேஆர் இளைஞர் பகுதியின் துணைத் தலைவர், பிளிஸ்சன் ஜைனுடினின் குற்றச்சாட்டுக்கு, ரபிஸி இவ்வாறு பதிலளித்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here