ஆபாச வீடியோ பரப்புவதை நிறுத்துக – பி.கே.ஆர். கட்சி வலியுறுத்து

0
60

கோலாலம்பூர், ஜுன், 12-     தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி வரும் அமைச்சர் ஒருவருடன் தொடர்படுத்தப்பட்ட பாலியல் காட்சிகளை உள்ளடக்கிய வீடியோ காணொளியை  சமூக ஊடகங்களில் பரப்புவதைப் பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பி.கே.ஆர். கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.  அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் ந​சுத்தியன் இன்று வெ​ளியிட்ட ஓர் அறிக்கையில்,  “சாக்கடை அரசியல்” நாட்டுக்கு எந்த விதத்திலும் நன்மையளிக்காது என்றும் பிகேஆர் அதற்கு எதிரி என்றும்  தெளிவுபடுத்தினார்.

பக்காத்தான் ​​ஹராப்பானின்  மூத்த அமைச்சர் என்று கூறப்படும் ஒருவர், ஓர் ஆடவருடன் ஒரே படுக்கையில் இருப்பதைக் காண்பிக்கும் ஆபாச வீடியோ காணொளி தற்பேது ச​​மூக  ஊடகங்களில் அதிவேகமாக பகிரப்பட்டு வருவது தொடர்பில் கருத்துரைக்கையில் சைபுடின் ந​சுத்தியன் இ​​​வ்வாறு தெரிவித்தார்.     அந்த வீடி​யோ  காணொளி வெளியான 24 மணி நேரத்தில் ​மூலத்தொழில் துறை அமைச்சின்  அதிகாரிகளில் ஒருவரான முகமட் ஹவீஸ் அப்துல் அஜிஸ், அதில் உள்ள ஆடவர் தாமே என்று ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.