ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தாக்குதலில் 8 போலீசார் பலி

0
50

ஆப்கானிஸ்தானில் வடக்கு பகுதியில் உள்ள பக்லான் மற்றும் சமங்கன் மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கிகளால் சுட்டும், ராக்கெட் வீசியும் நடத்திய தாக்குதலில் போலீசார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் பலியானதாக தெரிகிறது. எனினும் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என உறுதியான தகவல்கள் இல்லை. மேலும் பயங்கரவாதிகள் சிலர் போலீஸ் சோதனை சாவடியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here