ஆப்கானிஸ்தான் : அமெரிக்கா வான் வழி தாக்குதலில் தலிபான் முக்கியத் தளபதி பலி

0
51

காபூல், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்கள் பதுங்கி  உள்ள பகுதிகளில் ஆப்கன் அரசு மற்றும் அமெரிக்கப் படைகள்   வான்வழி தாக்குதல் நடத்தியது.இந்த வான்வழித் தாக்குதலில் அப்துல் மனன் என்ற தளபதி உட்பட 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

இத்தகவலை ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. அப்துலின் மரணத்தை தலிபான்களும், அம்மாகாண ஆளுநரான முகமது யாசின் கானும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் அவரின் மரணம் குறித்து அமெரிக்கா தரப்பில் இருந்து   அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here