ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு அடிபணிய மறுப்பதால் தமிழர்கள் படுகொலை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ராகுல் விமர்சனம்

0
105

தமிழர்கள் ஆர்எஸ்எஸ்  கொள்கைக்கு அடிபணிய மறுப்பதால் படுகொலை செய்யப்படுகின்றனர் என, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கிராம மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பயங்கர வன்முறை வெடித்தது.

இதில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதன் காரணமாக தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. தொடர்ந்து அபகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய தூப்பாக்கிச் சூட்டை அரசியல் தலைவர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,  “தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர்எஸ்எஸ்  கொள்கைக்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும்  தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன்  இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here