ஆலயங்களில் நமது அரசியல்! -பகுதி: மூன்று

0
204

களம் காணுபவர்: முனைவர் பெரு. அ. தமிழ்மணி

பகுதி– மூன்று!

இதுவரைக்குமான அரசின் நடவடிக்கையில் சட்டப்படி அமையப்பெற்றுள்ள எந்த ஆலயத்தையும் இடித்துத் தள்ளியது கிடையாது, அப்படித் தள்ளினால் அரசு செய்கிற சட்டவிரோதமான நடவடிக்கையாக அது அமைந்துவிடும், அதேவேளை  அரசியல் அமைப்புச்சட்டத்தை மீறியதாக அமைந்துவிடும், அப்படி மேற்கொள்ளப்படுகிற எந்த நடவடிக்கையும்  நாட்டில், மதக் கலவரத்தை நிச்சயம் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக 1976 ஆம் ஆண்டுவாக்கில், ஒரு பல்கலைக்கழக வட்டத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று ‘டாக்வா’ எனும் மதத் தீவிரவாத அமைப்பின் பின்னணியோடு முனைப்போடுத் திட்டமிட்டு, நாட்டின் பல பாகங்களில் 33 இந்து ஆலயங்கள் உடைபட காரணமாகயிருந்தது. இதில்33 வதுதாக கெர்லிங் சுப்ரமணியர் ஆலயம் அமைந்தது, அந்த ஆலயம் உட்பட நேர்ந்த போதுதான் அந்நோரம், ஆலயத்தைக் காவல் காத்திருந்த குழுவினரால், ஆலயத்தை உடைத்தெறிந்த  ஐந்து பேர் தாக்கப்பட்டு, அதில் நால்வர் இறக்கவும், ஒருவர் தப்பித்து உயிர் பிழைக்கவும் நேர்ந்தது, இதனால் நாட்டில் பதற்றம் ஏற்பட்டது, கலவரம் மூலக்கூடிய சாத்தியமும் இருந்தது, அப்போதைய பிரதமர் துன் உசேன் ஓன், அப்பிரச்சனையை மிகவும் சாதூரியமாக சமாளித்து, அப்போது ம இ கா தலைவராயிருந்த டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தையும் அணுகி, கடும் விளைவுகள் நிகழ்வதை முற்றாகத் தவிர்த்தார், இருப்பினும் கொலையுண்டவர்களும், அக்கொலையில் ஈடுப்பட்ட குழுவினருக்கும் சட்டப்படியான தண்டனை என்னவோ அதன்படி எல்லாமே நீதிமன்ற விசாரணைக்குப்பிறகு  நடந்தேறியது.

அப்போது கூட, அந்த பிரச்சனையில் ஈடுப்பட நேர்ந்த சில ம இ கா தலைவர்களை ம இ கா தலைமை கண்டிக்கவும் செய்தது. முதலில் இந்த பிரச்சனையை திசை திருப்பும் வகையில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டிதான் அந்த சிலை உடைப்புக்கள் நடந்தேறுகின்றனவென்று  ம இ காவின் முக்கியத் தலைவரொவர் பேசவும் நேர்ந்தது, அப்போது அதையொட்டிய  பரபரபானச் செய்திகளும், பத்திரிகைகளில் வரவும் செய்தன, ஒரு கட்டத்தில்,  நாட்டின் ருக்குன் நெகரா கோட்பாட்டை எரிக்கவும் முனைந்து, அப்போது, ஜாலான் ஈப்போ, ஆறாவது மையிலில் உடைப்பட்டிருந்த முனிஸ்வரர் ஆலயத்தில் கண்டனக்கூட்டமும் ஏற்பாடாகியும் இருந்தது, பின்னர் போலீசின் அதிரடி நடவடிக்கையால் அக்கூட்டம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

எனவே, எது எப்படியிருப்பினும் எல்லா இனங்களிலும் அதீதமான தீவிரவாதிகள் சில காலகட்டங்களில், தவறான போதனைகளால் தலையெடுப்பதுண்டு, அத்தகைய தீவிரவாதத்தின் முன்பலத்தையும், பின்பலத்தையும் கண்டறிந்து, அதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய பொறுப்பு அரசுக்குண்டு!

அந்த அடிப்படையில் அரசு செயல்படத் தவறினால், நாட்டுக்கும் மக்களுக்கும் பெருங்கேடுதான் விளையும்,இப்படி நடந்ததுதான் சில ஆண்டுகளுக்கு முன்  தாமான் மேடான் சம்பவமும், அதையொட்டிய, பின் விளைவுகளுமாகும்! எனவே, சடங்குகளும் சம்பிராதங்களும் நமது வீட்டிற்குள் நடந்தேறும் வரை, அது நமக்கானதாகயிருக்கும், அதை பொதுவெளியில் ஓர் ஆக்கிரமிப்பாக உருவெடுக்க விட்டால், அது மற்றவர்களின் பிரச்சனையாகிவிடும், என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.

(தொடர்கிறது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.