ஆளுங்கட்சி,எதிர்கட்சி இரண்டும் 8 தேர்தல் சட்ட மீறல்களை செய்துள்ளன – பெர்சே

0
137

கோலாலம்பூர் : நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின், இரு கூட்டணி தரப்பினரும் மாநில மற்றும் சட்டமன்ற நிதியை தேர்தல் நிதியுதவியாக வழங்கியிருப்பதை பெர்சே வன்மையாக கண்டித்துள்ளது.

பொதுத்தேர்தல் கண்காணிப்பு குழுவான அது,தேர்தல் ஆணையம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் இரண்டையும் அரசாங்கத்தின் நிதியின் ‘அப்பட்டமான,திறந்த துஷ்பிரயோகத்திற்கு’ உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின் நாடு முழுவதிலும் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெற்றிருப்பதாக அது தெரிவித்துள்ளது.பராமரிப்பு அமைச்சரவை அரசியல்வாதிகள் அரசாங்க           போர்வையில் நிதி வழங்குவது அதிகார துஷ்பிரயோகமாகும் என்றது பெர்சே. GS

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here