இங்கிலாந்து நாடாளுமன்ற முடக்கம் அமலுக்கு வந்தது

0
12

முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்துவதற்கான வாக்கெடுப்பில் இங்கிலாந்து பிரதமர் போரில் ஜான்சன் மீண்டும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கான நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரக்சிட் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இதே போல், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே, அக்டோபர் 15-ம் தேதி தேர்தலை நடத்த வேண்டுமென்ற போரிசின் கோரிக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் நிராகரித்தனர்.

இந்தநிலையில் போரிஸ் அரசின் கோரிக்கை படி, 5 வார காலத்திற்கு நாடாளுமன்றத்தை முடக்கும் நடைமுறை நேற்று அமலானது. நேற்று முதல் அக்டோபர் 14ம் தேதி வரை நாடாளுமன்றம் செயல்படாது. இது குறித்து பிரதமர் போரிஸ் அளித்த பேட்டியில், ‘‘இக்கட்டான நிலைக்கு எங்களை தள்ளிய எதிர்க்கட்சிகள் ஓடி ஒளிய முடியாது. நிச்சயம் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும். புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்,’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.