இசிஆர்எல்: 3.1 பில்லியன் பணத்தை சீனா திருப்பித் தரும்!

0
60

இரண்டாம் கட்ட கிழக்குக் கரை இரயில் திட்டத்தின் (இசிஆர்எல்) அசல் ஒப்பந்தத்தின்படி, 3.1 பில்லியன் ரிங்கிட் பணத்தை சீனா கம்யூனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ராக்‌ஷன் கம்பேனி லிமிடெட் (சிசிசிசி) திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

500 மில்லியன் ரிங்கிட் அடுத்த ஒரு வாரத்திலும், மேலும் ஒரு 500 மில்லியன் ரிங்கிட் பணம் ஒரு மாதக் காலத்திலும் திருப்பிச் செலுத்தப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.

பாக்கி பணம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

சிசிசிசி மற்றும் மலேசிய இரயில் இணைப்பு நிறுவனத்தோடு இன்று திங்கட்கிழமை நடைபெற்ற துணை ஒப்பந்தத்தின் போது பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார். முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேலைகளை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம், பொறியியல், கொள்முதல், கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு வேலைகள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

இதன் வாயிலாக, அசல் தொகையான 65.5 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து,  சுமார் 21.5 பில்லியன் ரிங்கிட் பணம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here