இந்தியப்பிரஜை இறந்து கிடந்தார்

0
16

பத்துகேவ்ஸ், நவ.29- சிலாங்கூர், தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உணவகம் ஒன்றின் அருகில் ஐந்தடிப்பாதையின் படிகட்டில்  இந்தியப்பிரஜை ஒருவர்  இறந்து கிடந்தார். அவரின் சடலம் இன்று காலை 6.30 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடல், அசை​வின்றி கிடந்ததை  கண்ட பொது மக்கள் அம்புலன்​ஸ் வண்டிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது என்று  கோம்பாக்  மாவட்ட போ​லீ​ஸ்  தலைவர் அரிபாய் தராவி தெரிவித்தார். அந்த இந்தியப்பிரஜைக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.