இந்தியா பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

0
24
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், காஷ்மீர் மாநில பிரிவினைக்கு பின்னர் அங்கு தொடர்ந்து அரசியல் தலைவர்கள் சிறைவைப்பு, மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய விவகாரம், பிரியங்கா காந்தி செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் தற்கொலை என பல பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் அரசுத் தரப்பு பதில் சொல்வதற்கு தயாராக உள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும். டிசம்பர் 13-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.