இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை: பாகிஸ்தான் சொல்கிறது

0
47
புதுடெல்லி,
கடந்த பிப்ரவரி 27-ந் தேதி, இந்திய வான் மண்டலத்துக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. சமீபத்தில் இதுதொடர்பாக ஒரு அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட தகவலால் சந்தேகம் எழுந்தது. இருப்பினும், எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப்படை தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய விமானப்படை துணைத்தளபதி ஆர்.ஜி.கே.கபூர் நேற்று இதை மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அவர் கூறியதாவது:-எப்-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது உண்மை. அதற்கான மறுக்க இயலாத ஆதாரங்களும், தகவல்களும் உள்ளன என்று கூறினார்.
பாகிஸ்தான் விமானம் சுடப்பட்டது தொடர்பான ‘ராடார்’ காட்சிகளை அவர் நிருபர்களிடம் காண்பித்தார். இந்த நிலையில், இந்தியா வெளியிட்ட ரேடார் காட்சிகள் உண்மையானது இல்லை என்று பாகிஸ்தான் புது விளக்கம்  அளித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் தனது டுவிட்டரில், இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here