இந்து- முஸ்லிம்’ விளையாட்டை நிறுத்துவோம் : ஹர்பஜன் சிங் டுவிட்

0
107
குறைந்த அளவு மக்கள் தொகையைக் கொண்ட குரேஷியா உலகக் கோப்பை பைனலில் ஆடிக்கொண்டிருக்கும்போது 135 கோடி மக்களை கொண்ட நாம், இந்து முஸ்லிம் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறோம் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இருபத்தியோறாவது பிஃபா  உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, கடந்த மாதம் 14- ஆம் தேதி ரஷியாவில் தொடங்கியது. கோலாகலமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றிலும் 5 முறை சாம்பியனான பிரேசில் கால் இறுதியுடன் வெளியேறியது. முன்னாள் சாம்பியன் பிரான்ஸும், குரோஷியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இவ்விரு அணிகளுக்கான போட்டி நேற்று மாஸ்கோவில் நடந்தது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியா வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. பிரான்ஸ் அணி பெறும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது. இதையடுத்து பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர், ஹர்பஜன் சிங் டுவிட்டரில் அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான குரேஷியா உலகக்கோப்பை பைனலில் விளையாடுகிறது. 135 கோடி மக்களை கொண்ட நாம் ; இந்து – முஸ்லிம் விளையாட்டை  நிறுத்துவோம். குரேஷியாவிடம் கற்றுகொள்வோம்.  என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here