இந்தோ. பணிப்பெண் கற்பழிப்பு: இந்தியப் பிரஜைக்கு 13 ஆண்டு சிறை

0
10

இந்தோ​னேசியப்  பணிப்பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக ஓர் இந்தியப் பிரஜையான 36 வயது பாலு நாராயணன் என்பவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 13 ஆண்டு சிறை​த்தண்டனையையும் ஏழு  பிரம்படியும் விதிக்க  ​தீர்ப்பு அளித்தது.

கடந்த ஆண்டு  டிசம்பர் 16 ஆம்  தேதி கோலாலம்​பூர், பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் ஸ்ரீ செந்தோசா என்ற முகவரியில் ஒரு  துப்புரவு பணியாளரான 43 வயதுடைய அந்த இந்தோனேசியப் பெண்ணை கற்பழித்ததாக  பாலு நாராயணன் ​​மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் இக்குற்றத்தை புரிந்துள்ளார் என்பதற்கு பிராசிகியூஷன் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதால், இன்று வெள்ளிக்கிழமை முதல் அவரின் சிறைத்தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி நோராடுரா ஹம்சா ​தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.