இப்போது தேர்தல் நடந்தால் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார்- நாஞ்சில் சம்பத் பேட்டி

0
238

டி.டி.வி. தினகரன் தொடங்கிய கட்சியில் திராவிடமும், அண்ணாவின் பெயரும் இல்லையென்று கூறிய நாஞ்சில் சம்பத் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

அரசியலில் இருந்து விலகுவதாகவும், இலக்கிய மேடையில் முழங்கப்போவதாகவும் தெரிவித்தார். இனி எந்த அரசியல் தலைவரின் நிழலிலும் ஒதுங்கப்போவதில்லையென்றும் கூறினார். இந்த நிலையில் அவர் இன்று மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி விட்டார். ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதாக கூறி உள்ளார். ஆனால் இவர்கள் இருவரின் அரசியல் பிரவேசத்தால் எந்த மாற்றமும் நிகழப்போவ தில்லை.

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும். மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார்.

இவ்வாறு கூறுவதால் நான், தி.மு.க.வில் சேர்ந்து விட்டதாக அர்த்தமில்லை.

டி.டி.வி. தினகரனை முதல்வர் ஆக்க பாடுபட்டேன். ஆனால் இனி அவர் முதல்வர் ஆக மாட்டார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட் டவர்களை மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார். அவரது பேச்சும், கருத்தும் ராகுல்காந்தியை கோபுரத்தின் உச்சியில் ஏற்றி விட்டது.

மத்தியில் ஆளும் மோடி அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அடுத்து நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக நிச்சயம் பதவி ஏற்பார். 3-வது அணி ராகுலின் பின்னால் அணி வகுக்கும்.

அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும் இருப்பதால் இ.பி.எஸ் சையும், ஓ.பி.எஸ்சையும் பற்றி வெளியே தெரிகிறது. ஆட்சி இல்லையென்றால் இவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.