இலக்கியக் குரிசில் மா. இராமையா காலமானார்

0
16

ஜோகூர்பாரு, நவ.13- தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் பங்காற்றிய மலேசியாவின் முன்னணி மூத்த எழுத்தாளர் இலக்கியக் குரிசில் முனைவர் மா. இராமையா  இன்று காலமானார்.

அவருக்கு வயது 89. மூப்பின் காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஜோகூர்,  தங்காக் (TANGKAK) நகரை பிறப்பிடமாக கொண்டிருந்த மா. இராமையா, சிறுகதை மன்னர் எனச் சிறப்புப் பெற்றவர். சிறந்த சொற்பொழிவாளர். தனது கதை மாந்தர்களுக்கு நல்ல இனிய தமிழ்ப் பெயர்களைச்சூட்டி, படிப்போர் கவனத்தைக் கவர்ந்தவர்.

ஓர் அஞ்சலக  அதிகாரியாக அரசுத்துறையில் சேவையாற்றி, ஓய்வுப்பெற்றவரான மா. இராமையாக எண்ணற்ற  சிறுகதைகள் மற்றும்  கவிதைகளை  தமிழ்நேசன்  உட்பட அனைத்து தமிழ்ப்பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர். மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு, மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்  என  வரலாற்று தொகுப்புகளை நூலாக தந்தவர்.

அவரின் தமிழ் இலக்கியச் சேவையைப்  பாராட்டி 1994 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை தனது 6-ஆவது பேராளர் மாநாட்டில் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.