ஈஸ்வரி கொலை வழக்கில் இருவர் மீது குற்றச்சாட்டு

0
202

ஈப்போ ஈப்போ தாமான் பெர்மாயில் இரு வாரங்களுக்கு முன்பு வீடு புகுந்து குடும்ப மாதை கொலை செய்ததாக இருவர் மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கொலை செய்யப்பட்ட ஈஸ்வரியின் (வயது 34) உறவினரான சொங் ஆ கியோங் (வயது 24) மற்றும் 17 வயதுடைய அவரது நண்பருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி ஈஸ்வரியை இவர்கள் கூட்டாக சேர்ந்து இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இக்குற்றச்சாட்டு குற்றவியல் சட்டம் பிரிவு 302இன் மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 34இன் கீழ் கொண்டு வரப்பட்டது.

மாஜிஸ்திரேட் நூருல் அபிசா முகமது பௌசி முன்னிலையில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்தபோது இவ்விருவரும் குற்றச்சாட்டிற்கு தலையை அசைத்தனர். ஆனால், இதற்கு ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.