உணவில் புழு முருகன் இட்லி கடைக்கு சீல்

0
14

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முருகன் இட்லி கடை என்ற பெயரில் 27 கிளைகளுடன் உணவகம் இயங்கி வருகிறது.  இந்த உணவகத்தின் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உணவு தயாரிக்கப்பட்டு 27 கிளைகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில், முருகன் இட்லி கடையில் வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாகவும் உணவில் புழுக்கள் நெளிவதாகவும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள உணவு தயாரிக்கும் குடோனில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து முருகன் இட்லி நிறுவனத்தின் உணவு தயாரிக்கும் குடோனுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.