உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்

0
90
உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராயம் விறபனை செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை குடித்ததால் 12 பேர்  பலியாகியுள்ளனர். பலர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதற்கு உள்ளூர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மது உற்பத்தியின் பின்னால் உள்ளவர்கள் யார்? என்று இதுவரை  தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.