உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை- மு.க.ஸ்டாலின்

0
54
மதுரை
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை விரகனூர், கோழிமேடு பகுதி பொதுமக்களிடையே திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது;-
உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை. ஆட்சி மாற்றம் வந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகள் குறைக்கப்படும் என கூறினார்.
சிலைமான் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் மட்டுமே கவனம் உள்ளதாக கூறினார்.
எம்.ஜி.ஆருக்கே தலைவராக இருந்த கருணாநிதிக்கு 6 அடி நிலம் தர மறுத்த அ.தி.மு.க அரசுக்கு, தமிழகத்தில் இடம் தரக்கூடாது என வாக்காளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here